கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 125 ஆக உயர்வு.!

இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2069ஆக இருந்துவந்த நிலையில் இன்று 2301-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை இந்தியாவில்  157 பேர் குணமடைந்து வீட்டிற்க்கு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில்  இன்று காலை கொரோனா பாதிப்பு  வரை 124 இருந்தது. ஆனால் தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால்  கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 125 ஆக உயர்ந்துள்ளது. … Read more

தனக்கும் கொரோனா இருக்கும் என்ற அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட நபர்!

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும், இதுகுறித்த பல வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது.  இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பென்ட்வால் பகுதியை சேர்ந்தவர் சதாசிவ ஷெட்டி(56). இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். அங்கு வந்த மற்றவர்களிடம் இருந்து தனக்கு கொரோனா தொற்று பரவி இருக்கும் … Read more

கொரோனா பாதிப்பிற்கு மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்தார்! கர்நாடகாவில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று உள்ளவர்களை தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி உயிரிழந்ததாக தற்போது, தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடகாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. 

1,000 வென்டிலேட்டர்கள், 5 லட்சம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க முடிவு-பி.ஸ்ரீரமாலு.!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸால் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 2 பேர் குணடைந்துள்ளனர். ஒருவர் இறந்துள்ளனர். இந்நிலையில் இன்று  கர்நாடக சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீரமாலு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில்  1,000 வென்டிலேட்டர்கள், 5 லட்சம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதாக என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 -ஆக உயர்வு கர்நாடகாவில்!

 கர்நாடகாவில் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 -ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று வரை 26 கொரோனா வைரஸ் பாதிப்புகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மரணம் அடங்கும் என கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளார்.