ஏஜிஆர் என்ட்ரி… ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு…! கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்…!

நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெடுஞ்சாலை படத்தை  இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தில் கெளதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் இதற்கு முன்பு  கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற  “முஃப்தி” படத்தின் தமிழ் ரீமேக். இதையும் படியுங்களேன்- என்னோட … Read more

100 கிலோ to 70 கிலோ.! Dr.சிலம்பரசனின் அட்டகாசமான காம்பேக் வீடியோ.!

நடிகர் சிலம்பரசன் தனது 100 கிலோ உடல் எடையை கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எவ்வாறு 70 கிலோவாக குறைத்தார் என்ற வீடியோ நேற்று இரவு வெளியிடபட்டது. நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. இப்படி ஒரு பெரிய வெற்றிக்காக பல வருடங்கள் சிலம்பரசன் காத்திருந்தார் என்பதே உண்மை. இடைப்பட்ட வருடங்களில் அவர் மிகவும் குண்டாக தனது இளமையான தோற்றத்தை இறந்துவிட்டார் என்று … Read more

பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம் – நடிகர் சிம்பு அறிக்கை..!

நடிகர் சிம்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் எனது பிறந்தநாளன்று நான் உங்களோடுதான் இருக்க வேண்டும் ஆனால் சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை வெளியூர் செல்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.  நடிகர் சிம்பு தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.இவர் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. சிம்புவிற்கு நல்ல கம்பேக் என்றே கூறலாம். இந்த … Read more

சிம்பு பிறந்த நாள் பரிசாக “மாநாடு” திரைப்படத்தின் டீசர்…!

பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநாடு படத்தின் டீசரை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துவரும் திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனி நடிக்கிறார். மேலும் எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாம் லூக் … Read more