ரஷ்யாவின் குறுக்கீடு நிச்சயம் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலிலும் இருக்கும்!

தேசிய புலனாய்வுத்துறை இயக்குநர் டேனியல் கோட் (Daniel Coats)  அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் குறுக்கீடு செய்ய ரஷ்யா முயற்சிக்கும் என தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டு, முறைகேடுகள் செய்ததாகவும், இதனாலேயே டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை ரஷ்யாவும், அமெரிக்க அதிபர் டிரம்பும் மறுத்த நிலையில், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தேர்தலில், ரஷ்யா குறுக்கீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குநர் … Read more

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை! புதியவகை அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறதாக குற்றச்சாட்டு …

அமெரிக்கா  கூறியது , பாகிஸ்தான் புதியவகை அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் நாடாளுமன்றக் குழு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ்,  பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகத் தெரிவித்தார். குறுகிய தூர ஆயுதங்கள், கடல் சார் க்ரூயிஸ் ஏவுகணைகள், வான் சார்ந்த குரூயிஸ் ஏவுகணைகள், நீண்டதூர ஏவுகணைகள் உள்ளிட்டவறை பாகிஸ்தான் தயாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். இது தெற்காசிய மண்டலத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் அவர் … Read more

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவிரிவான உள்கட்டமைப்பு மசோதா !

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒன்றரை லட்சம் கோடி டாலர் மதிப்பீட்டிலான மிகப்பெரிய அமெரிக்க உள்கட்டமைப்புத் திட்டத்தை   வெளியிட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே மிகவிரிவான உள்கட்டமைப்பு மசோதா என அதை வர்ணித்துள்ள அதிபர் டிரம்ப், சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள் மட்டுமின்றி, குடிநீர், வடிகால் முறைகள், நீராதாரங்கள், நீர்வழிகள், எரிசக்தி, ஊரக உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமையும் என்றார். அமெரிக்கர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை கட்டமைக்க, இந்த மசோதா மீது அமெரிக்க நாடாளுமன்றம் விரைந்து செயல்பட வேண்டும் எனவும் … Read more

அமெரிக்க உள்கட்டமைப்பு, ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்க திட்டம்!அமெரிக்க பட்ஜெட்……

உள்கட்டமைப்பு, மெக்சிகோ எல்லையில் சுவர் அமைத்தல் ஆகியவற்றுக்கு அமெரிக்க பட்ஜெட்டில்   பெருவாரியான நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட்டில் நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட உள்ளது. உள்கட்டமைப்புக்கு 200 பில்லியன் டாலர்களும், மெக்சிகோ எல்லையில் சுவர் அமைக்க 18 பில்லியன் டாலர்களும் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. மருத்துவத்திற்கும் அதிக நிதி வழங்கப்படப்பட உள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.  

ஹாலிவுட்டில் பல்வேறு முன்னணி நடிகைகளை தகாத முறையில் நடந்து கொண்ட விவகாரம்!மேலும் ஒரு வழக்கு …

அமெரிக்காவின் நியூயார்க் மாகாண அரசு வழக்கறிஞர் படத்தயாரிப்பு நிறுவனத்தின் உயர்பொறுப்பில் இருந்து பாலியல் புகாரால் பதவியிழந்த ஹார்வே வெய்ன்ஸ்டீனுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். மிராமேக்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்த ஹார்வே வெயின்ஸ்டீன் படவாய்ப்புகள் தருவதாக கூறி பல முன்னணி நடிகைகள் உள்பட 70 பேரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், பொது இடங்களில் அவமதிக்கப்பட்டு வரும் ஹார்வேவுக்கு எதிராக நியூயார்க் மாகாண அரசு வழக்கறிஞர் எரிக் டி … Read more

அமெரிக்காவின் ஹெச்1பி விசா குறித்த நடைமுறையில் பெரிய மாற்றங்கள் இருக்காது!

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்காவின் ஹெச்1பி(H-1B) விசா குறித்த நடைமுறையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று  நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ஹெச்1பி(H-1B) விசா குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ஹெச்1பி(H-1B) விசா விவகாரத்தை இந்திய அரசு தொடர்ந்து கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். விசா நடைமுறையில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் இந்தியர்களை பாதிக்காமல் … Read more

1500 விமானங்கள் சேவை பாதிப்பு !அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பனிப்புயல்….

1500 விமானங்களின் அமெரிக்காவில் கடுமையாக வீசிவரும் பனிப்புயல் காரணமாக  சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் பனிப்புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் சாலையில் ஒரு அடி உயரத்திற்கு பனிகள் உறைந்து போய் உள்ளதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் நியூயார்க், நியூ இங்கிலாந்து, விஸ்கான்சின், வடக்கு இல்லினாய்ஸ் மற்றும் மிச்சிகன் மாகாணங்களும் மோசமான பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. சாலையெங்கும் நிறைந்திருக்கும் பனியில் குழந்தைகள் சறுக்கி விளையாடி பொழுதைக் கழித்து வருகின்றனர். சிகாகோவின் சாலைகளில் பனியில் … Read more

ஜான் சீனா குழந்தைகளுக்காக எழுதிய புத்தகம்!

தாம் எழுதிய புத்தகத்தை மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா குழந்தைகளுக்காக  வெளியிடவுள்ளார். சிறுவயதில் தாம் கற்றுக் கொண்ட இலக்கை நோக்கிய பயணத்தின் முக்கியத்துவத்தை இளைய தலை முறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டியது தமது கடமை என்று ஜான் சீனா கூறியுள்ளார். அதன்படி வாழ்க்கையின் குறிக்கோளை அடைவது, அன்பு உள்ளிட்டவை குறித்து தமது புத்தகத் தொகுப்பில் நகைச்சுவையான காமிக் கதைகளின் மூலம் கூறியுள்ளதாக ஜான் சீனா குறிப்பிட்டுள்ளார். முதல் புத்தகமான எல்போ கிரீஸ் (Elbow Grease) வரும் அக்டோபர் … Read more

இதோ அமெரிக்காவின் பேச்சு புயல்!இந்திய அரசியல்வாதிகளுக்கு சவால்விடும் அளவுக்கு பேசிய எம்.பி….

ஜனநாயகக் கட்சி எம்.பி.யான நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில், 8 மணி நேரம் 7 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக பேசி சாதனை படைத்துள்ளார். பிரதிநிதிகள் சபையின் முன்னாள் தலைவரும், பிரதிநிதிகள் சபையின் தற்போதைய ஜனநாயகக் கட்சி தலைவருமான நான்சி பெலோசி, 77 வயது நிரம்பியவர். புதன்கிழமை காலை 10 மணியளவில் பேசத் தொடங்கி, மாலை 6.11 மணிக்கு முடித்துள்ளார். முறையான ஆவணங்கள் இன்றி மிகச்சிறு வயதில் குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி … Read more

அமெரிக்க அதிபர் டிரம்ப் பெண்டகனுக்கு  உத்தரவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்புக்கு திட்டமிடுமாறு ராணுவ தலைமையகமான பெண்டகனுக்கு  உத்தரவிட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு வளைகுடா போர் முடிவுக்கு வந்த போது வாஷிங்டன் DC-யில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதன்பின்னர் தற்போது வரை அமெரிக்காவில் ராணுவ அணிவகுப்புகள் நடைபெறவில்லை. ஆனால் தற்போது ராணுவ அணிவகுப்பை நடத்த முடிவு செய்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இதுதொடர்பாக திட்டமிடுமாறு பெண்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார். ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக அணிவகுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. … Read more