முதன் முறையாக மீண்டும் சர்ச்சை இயக்குனருடன் கைகோர்க்கும் கார்த்தி!

கார்த்தி அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.  அதனை தொடர்ந்து கார்த்தியை இயக்க கார்த்திக் தங்கவேலு, பி.எஸ்.மித்ரன், முத்தையா என பலர் காத்திருக்கின்றனர்.  கார்த்தி நடிப்பில் கைதி, தம்பி பட வெற்றிக்கு பின்னர் அடுத்ததாக ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படங்களை அடுத்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த சரித்திர படம் உருவாக வருடக்கணக்கில் ஆகும். … Read more

இரண்டாவது இன்னிங்ஸில் கிராமத்து கதாபாத்திரத்தில் களமிறங்கும் ஜோதிகா!

தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கி பயணித்து வருகிறார் நடிகை ஜோதிகா. இவர் நடிப்பில் கடைசியாக ஜேக்பாட் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தை அடுத்து, மீண்டும் சூர்யாவின் 2டி பட நிறுவனம் தயாரிப்பில் அடுத்தடுத்து 2 படங்கள் கமிட்டாகி உள்ளார். அதில் ஒன்று, பொன்மகள் வந்தாள் திரைப்படம் இதில் பாரதிராஜா, பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தை அடுத்து, கிராமத்து கதைக்களத்தில் கிராமத்து பெண்ணாக ஜோதிகா நடிக்க உள்ளார். … Read more

100 காலா 500 கபாலி 1000 பாட்ஷா சேர்ந்தது இந்த ஜேக்பாட்! ஜோதிகாவின் கலக்கல் காமெடியில் வெளியான ட்ரெய்லர் இதோ!

சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா தற்போது நடித்து உள்ள திரைப்படம் ஜேக்பாட். இந்த படத்தை கல்யாண் இயக்கி உள்ளார். சூர்யா தான் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் ரேவதி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் என பலர் நடிப்பில் காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த ட்ரைலர் மிகவும் காமெடியாக உள்ளது. இதில் ஜோதிகா மிகவும் காமெடியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது.  

சூர்யாவின் அடுத்த அதிரடி! உறியடி 2!!!

2016ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் விஜய் குமார் என்றவர் இயக்கி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி ரசிகன்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் உறியடி. இப்படம் இன்றைய மாணவர்களின் கல்லூரி வாழ்கை, சாதி வெறி, அரசியல் என பல விஷயங்களை தோலுறித்து தைரியமாக காட்சிபடுத்தபட்டிருந்தது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. இதனை நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனை சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். DINASUVADU