தூத்துக்குடியில் சாரல் மழை!!!

தூத்துக்குடியில்  வெயிலின்   காரணமாக மக்கள்  அவதிப்பட்டு வந்தநிலையில்   காலை 11 மணிக்கு மேல் மேகமூட்டமாக இருந்தது , இப்பொழுது தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி அருகிலுள்ள தோப்புகளில் தீ விபத்து …!!!

பழையகாயல் அகரம் பாலம் அருகே நேற்று  மதியம் கட்டுக்கடங்காத தீ விபத்து ஏற்பட்டது .சாலையோர தென்னை/ பனை/ வாழைமரங்கள் தீ பிடித்து எரிந்தன. திருச்செந்தூர் ,தூத்துக்குடி இடையே  போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள்  போராடி  தீ-ஐ  கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தூத்துக்குடியில் மருந்து வணிகர்கள் சங்க தேர்தல்!!!

தூத்துக்குடியில் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் தேர்தல் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ஜான் பிரிட்டோ தலைமை வகித்தார்.இதையொட்டி நடந்த தேர்தலில் பொருளாளர் வீரபத்திரன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் . டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கு மட்டுமே மருந்துகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில செயலாளர் … Read more

விவசாயிகள் நடத்திய பேய் ஓட்டும் போராட்டம்!!

நிலுவையிலுள்ள வறட்சி நிவாரணத்தொகையை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதீய கிசான் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேப்பிலை, உடுக்கை அடித்துப் பேய் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரி  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு செய்துள்ள மேல்முறையீட்டை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பாரதீய கிசான் சங்க விவசாயிகள் பேய் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்துாரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம் கொண்டாட்டம் !!!

திருச்செந்துார் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தோ் இழுத்து நேர்த்தி கடனைச்செலுத்தினர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது.  காலை 6.20 மணிக்கு சிம்ம லக்கனத்தில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க 6.40 மணிக்கு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது, தொடர்ந்து காலை 6.50 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக … Read more

தூத்துக்குடி இரட்டைக் கொலைக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்

தூத்துக்குடியில் இரட்டைக் கொலை சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. போலி ஆவணங்கள் தயாரித்து சொத்துக்களை பறிக்க முயன்ற கொலையாளி உட்பட 7பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை தெருவைச் சேர்ந்த ஜெயலிங்கம் (60) என்பவர் இரும்புக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் தூத்துக்குடி கே.வி.கே.நகரைச் சேர்ந்த பண்டாரம் (55) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 9.45 மணி அளவில் ஜெயலிங்கம் தனது … Read more

தூத்துக்குடி செல்போன் கடையில் விற்பனை : காவல்துறையின் ரேடியோ ரிசீவர்கள் வாக்கி டாக்கிகள் பறிமுதல்

தூத்துக்குடியில் அனுமதி பெறாமல் காவல்துறையினர் பயன்படுத்தும் ரேடியோ வயர்லெஸ் ரிசீவர்கள், வாக்கி டாக்கி உள்ளிட்ட கருவிகளை விற்பனை செய்த 3 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 77 வயர்லெஸ் கருவிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு செல்போன் கடையில் ேபாலீசார் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த போலீசார் பயன்படுத்தும் ரேடியோ, வயர்லெஸ் ரிசீவர்கள், வாக்கி டாக்கிகள் ேபான்ற 57 வயர்லெஸ் கருவிகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கடை உரிமையாளர் ஷேக் மீரான் … Read more

தூத்துக்குடியில் ரவுடி குத்திக்கொலை ….!

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே தெற்கு சங்கரபேரியை சேர்ந்த லாரி டிரைவர் அங்குசாமி என்ற ஈஸ்வரன் (46). இவருக்கு தங்கமாரியம்மாள் என்ற மனைவியும் 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். 2012ல் மாரீசன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர். மேலும் ஒரு சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிப்காட் காவல் நிலையத்தில் அங்குசாமி ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார். இதே பகுதியை சேர்ந்த மற்றொரு லாரி டிரைவர் முனியசாமி (48). இவருக்கு 3 மகன்கள். கடந்த 2 … Read more

தூத்துக்குடியில் காவல்துறையைக் கண்டித்து 19ம் தேதி வியாபாரிகள் கடையடைப்பு

நெல்லையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடியில் காவல்துறையினர் வியாபாரிகளிடம் செல்போன்களை பறித்து கொலை, கொள்ளை குற்றவாளிகளைப்போல நடத்துவது, வியாபாரிகளை ஆபாசமாக திட்டி தாக்குவது போன்றவற்றை கண்டித்து வருகிற 19ம் தேதி தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தர்மர் ராஜா கூறுகையில், தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையிலான போலீசார், வியாபாரிகளிடம் … Read more

தூத்துக்குடியில் பரபரப்பு : கல்லூரி மாணவ மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல்!!!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கிள்ளிக்குளம் வேளாண்மைக்கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல்  பாதித்த அனைவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன்  காரணமாக கல்லூரி 16 ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது .