டி20 :14 வருடத்திற்கு பிறகு ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த கனடா வீரர்..!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது டி 20 அறிமுகப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 2005-ம் ஆண்டு 98 ரன்கள் குவித்தார்.

டி20 உலகக்கோப்பைக்கான தகுதி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கனடா அணியும் , கெய்மன் தீவு அணியும்  கடந்த திங்கள்கிழமை மோதியது. இப்போட்டியில் கனடா அணி  சார்ந்த ரவீந்தர்பால் சிங் என்ற வீரர் ஒருவர் 48 பந்தில்  6 பவுண்டரி , 10 சிக்சர் என 101 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் டி20 அறிமுக போட்டியில் அதிக ரன்கள் குவித்த ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்துள்ளார்.இந்த சாதனையை 14 வருடத்திற்குப் பிறகு முறியடிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் அறிமுக போட்டியில் டேவிட் வார்னர் 89 , ஹிரால் பட்டேல் 88 , அட்னான் இட்ரீஸ் 79 ரன்களும் அடித்துள்ளனர்.

author avatar
murugan