சுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு அதிகமானதால் விமான நிலையம் மூடல்!

ஜெனீவா விமான நிலையம் பனிப்பொழிவு அதிகமானதால் மூடப்பட்ட நிலையில்   மீண்டும் செயல்பட தொடங்கியது.

Image result for GENEVA SNOW AIRPORT

சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான பகுதிகளில் மைனஸ் 7 டிகிரி வெப்பம் நிலவுகிறது. ஜெனீவாவில் கடுமையான பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. அங்குள்ள விமான நிலையத்தை பனி மூடியதால் விமானங்களை இயக்குவது சவாலாக மாறி உள்ளது. ஓடுபாதை பனியால் மூடப்பட்டதுடன் வானிலையும் மோசமாக உள்ளதால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

சில மணி நேரங்களுக்குப் பின்னர் நிலைமை ஓரளவு சீரானதும் மீண்டும் விமான நிலையம் செயல்பட தொடங்கியது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment