ராணுவத்தினர் அரசால் சென்றடைய முடியாத இடங்களில் சென்று தொண்டாற்றுகின்றனர்!

ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத்  அரசுத் துறையினரால் சென்றடைய முடியாத இடங்களில் பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ராணுவம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். நாட்டைக் கட்டமைப்பதில் முப்படைகளின் பங்களிப்பு என்னும் தலைப்பில் டெல்லியில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அரசுத் துறையினரால் சென்றடைய முடியாத பகுதிகளில் வாழும் மக்களுக்குக் கல்வி கற்பிப்பது, மருத்துவம் செய்வது ஆகிய பணிகளை ராணுவத்தினர் செய்து நாட்டின் கட்டமைப்புக்குப் பங்காற்றுவதாகத் தெரிவித்தார்.

ராணுவத்தினர் எங்குச் செல்கிறார்களோ அங்குத் தங்களின் தேவைக்காக உள்ளூர் மக்களின் விளைபொருட்களை அவர்கள் பணங்கொடுத்துக் கொள்முதல் செய்து பொருளாதாரத்துக்குப் பங்களிப்பதாகவும் தெரிவித்தார்.

ராணுவத்தினருக்கு மாத ஊதியம் வழங்கும்போது மூலத்திலேயே வரிப்பிடித்தம் செய்வதன்மூலம் அரசின் கருவூலத்துக்குப் பங்களிப்பைச் செலுத்துவதாகவும் பிபின் ராவத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment