அரைசதம் விளாசிய சூர்யா குமார் யாதவ், ரிங்கு சிங்.. மழையால் போட்டி 15 ஓவராக குறைப்பு ..!

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறவிருந்த போது  மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர் 2-வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில்  டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதைதொடர்ந்து, முதலில் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.  இருவருமே ஒரு ரன்கள் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் களமிறங்கிய  திலக் வர்மா, சூர்யா குமார் யாதவ் இருவரும் நிதானமாக விளையாடி சற்று ரன்களை  சேர்த்தனர். இதில் திலக் வர்மா 20 பந்தில் 29 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ரிங்கு சிங், சூர்யா குமார் யாதவ் உடன் சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினார். இதில் இருவரும் அரை சதம் அடித்தனர். சூர்யா குமார் யாதவ் அரைசதம் அடுத்த சில நிமிடங்களில் 56 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார்.

அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா ஒரு ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 19 ரன்களிலும், அர்ஷ்தீப் சிங் டக் அவுட் ஆகி  விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி ஓவரின் மூன்று பந்துகள் வீசியபோது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.  இறுதியாக இந்திய அணி 19.3 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 180 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டையும், தப்ரைஸ் ஷம்சி, லிசாட் வில்லியம்ஸ், மார்கோ ஜான்சன், அண்டில் , ஐடன் மார்க்ரம் தலா 1 விக்கெட்டை பறித்தனர். போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி 15 ஓவராக குறைக்கப்பட்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு  152 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

author avatar
Castro Murugan