இத்தகைய திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது – பாஜக முன்னாள் துணை மேயர்

சோலோகேமி  திருமணங்களை அங்கு நான் நடத்த விடமாட்டேன் என பாஜக முன்னாள் துணை மேயர் சுனிதா சுக்லா தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் உள்ள பரோடா பகுதியை சேர்ந்த பெண் சாமா பிந்து. இவருக்கு வயது 24. இவர் எம்எஸ் பல்கலைக்கழகத்தில் சோசியாலஜி பட்டம் பெற்றுள்ளார். இந்த  நிலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் ஜூன் 11ஆம் தேதி நடைபெற உள்ள தன்னுடைய திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.

இதற்கான ஆயத்த வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில், இவரது  திருமணத்தில் பங்கேற்க சில உறவினர்களையும் அழைத்துள்ளார். ஆனால் இந்த திருமணம் வித்தியாசமான முறையில் நடைபெற உள்ளது. ஏனென்றால் இந்த திருமணத்தில் மணமகன் இல்லை. அதற்கு காரணம் என்னவென்றால் அப்பெண் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் சிறுவயதில் இருந்தே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் நான் மணமகளாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் என்னை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.

இதுகுறித்து பாஜக முன்னாள் துணை மேயர் சுனிதா சுக்லா கூறுகையில், இத்தகைய திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது.இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும்.கோயில் புனிதமான இடம்,இது போன்ற திருமணங்களை அங்கு நான் நடத்த விடமாட்டேன் .

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment