உங்களுக்கான வெற்றி காத்திருக்கிறது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன் என முதல்வர் ட்வீட். 

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று, 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர் என அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த  நிலையில், தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து  செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன்! தேர்ச்சி பெறாதவர்கள், மனம் தளர வேண்டாம்! அடுத்த முயற்சியில் தேர்வு பெறுங்கள்! உங்களுக்கான வெற்றி காத்திருக்கிறது!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment