தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் மாணவர்கள் கல்லூரிக்கு வரவேண்டும் – அமைச்சர் பொன்முடி

மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்தாக அமைச்சர் தகவல்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த அனைத்து கல்லூரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. அவ்வாறு மீண்டும் திறக்கப்பட உள்ள கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறது.

இதில், அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் போட்டு இருக்க வேண்டும். அப்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டியிருந்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செப்டம்பர் 1-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், கட்டாயம் விடுதிகளில் உள்ள மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்கு வந்து விட்டு செல்லவேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை அரசு மற்றும் கல்லூரி நிர்வாகம் செய்யும் எனவும்கூறினார். அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசும்போது, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்