முன்னாள் அமைச்சரின் வாகனத் தொடரணி மீது கல்வீச்சு..!

முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரேவின் வாகனத் தொடரணி மீது கற்கள் வீசப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா : அவுரங்காபாத்தில் உள்ள வைஜாப்பூர் பகுதியில் சிவசேனா கட்சியின் சிவ் சன்வாத் யாத்திரை நடைபெற்றது. வைஜாப்பூரின் சாம்பாஜி நகரில் உள்ள கிராமச் செயலகத்துக்கு முன்பாக உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பல் கற்களை வீசியுள்ளது. நடைபெற்ற இந்த பொதுக்கூட்டம்  முடிந்து வெளியேறும் பொழுது தாக்கரேவின் வாகன தொடரணி மீதும் கற்கள் வீசப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவருமான அம்பாதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் உள்ளூர் எம்.எல்.ஏ ரமேஷ் போர்னாரேவுக்கு ஆதரவாக மக்கள் கோஷங்களை எழுப்பினர். இது இரு பிரிவினருக்கு (இந்து மற்றும் தலித்) இடையே பிளவு ஏற்படுத்த மக்கள் கூட்டத்த்தில் உள்ள சமூக விரோதிகளின் முயற்சி என்று அம்பாதாஸ் மேலும் கூறினார்.

ambadoss
File Image

ஆதித்யா தாக்கரேவின் இந்த வாகன தொடரணியில் ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் குறித்து அம்பாதாஸ், அம்மாநில காவல்துறை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார் மற்றும் நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பு வழங்காத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Ambadas Danawe has written to Maharashtra police Director General
Image Source indiatoday
author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment