வெற்றி துரைசாமியை தேடும் பணி ..6வது நாளாக தீவிர தேடலில் மீட்பு பணியினர் ..!

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரான சைதை துரைசாமி அவர்களின் மகனான வெற்றி துரைசாமியின் கார் கடந்த ஞாற்றுகிழமை அன்று விபத்துக்குள்ளானது. கடந்த ஞாயிறு அன்று ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கின்னூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில்  கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள சட்லஜ் எனும் நதியில் விழுந்து  விபத்துக்குள்ளானது.

வெடிகுண்டு மிரட்டல் – இன்டர்போல் உதவியை நாட முடிவு..!

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது படத்திற்காக லொகேஷன் பார்க்க இமாச்சல் பிரதேசம் சென்றிருந்தார். அவருடன் அவரது நண்பரான திருப்பூரை சேர்ந்த கோபிநாத்தும் சென்றிருந்தார். அங்கு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து லொகேஷன் பார்க்க புறப்பட்ட போது சுலேஜ் நதியின் மேல் உள்ள ஒரு தேசிய  நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது  கார் ட்ரைவர்  டென்சினிக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி உயரத்தில் இருந்து அருகில் இருந்த சட்லெஜ் நதியில் விழுந்தது. நடந்த இந்த கோர விபத்தில் கார் ட்ரைவர் டென்சின் அன்றே சடலமாக மீட்கப்பட்டார். பின் அதிலிருந்த வெற்றியின் நண்பரான கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து நடந்த அன்று கின்னூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபிநாத் அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஹிமாச்சல் காவல் துறையினர் கூறி இருந்தனர்.

காணாமல் போன வெற்றியை தேடும் பணிகள் தீவிரமாக  நடைபெற்று வந்த நிலையில் வெற்றியின் ஐஃபோன் கிடைத்தது. அதே நேரம்  அங்குள்ள  பாறையின்  இடுக்கில் மனித மூளை திசுக்கழும் கண்டெடுக்கப்பட்டது. அதை கைப்பற்றிய போலீஸார் அதனை டிஎன்ஏ (DNA) பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

அதே நேரம் விபத்து நடந்த இடத்திலிருந்து 15கி.மீ சுற்றளவில் வெற்றியை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அவரது உடைகளும், அவரது சூட்கேஸ் ஒன்றும் கிடைத்துள்ளது. மேலும் வெற்றியை காணாததால் காவல் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்றுடன் ஆறாவது நாளாகத் தொடர்ந்து தீவிர தேடுத்தலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

 

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment