• சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை  நிர்வாகம் ஆலையை திறக்கக்கோரி மனுதாக்கல் செய்தது.
  • சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் ஆலை பராமரிப்பு தொடர்பாக எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும்.தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கை இன்று  விசாரித்தது  உச்சநீதிமன்றம்.அதில்  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இதனால்    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
Image result for chennai high court
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை  நிர்வாகம் மனுதாக்கல் செய்தது.ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கபட்டுள்ள சீலை அகற்றக்கோரி மனுதாக்கல் செய்தது.இந்நிலையில் இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது.ஸ்டெர்லைட் தரப்பில்  மூத்த வழக்கறிஞர்கள் ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

அதேபோல்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜுனன் மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.கே.எஸ்.அர்ஜுனன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத் மற்றும் சுப்பு முத்துராமலிங்கம் ஆஜரானார்கள்.அதில், இந்த ஆலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இந்த ஆலையை திறக்கக் கூடாது  என்று கோரிக்கை வைத்தனர்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் ஆலை பராமரிப்பு தொடர்பாக எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது.அதேபோல் ஸ்டெர்லைட் ஆலை மனு தொடர்பாக  தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.