#BREAKING: அரிசி மீது ஜிஎஸ்டி – ரத்து செய்ய ஈபிஸ் கோரிக்கை!

உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ஈபிஸ் கோரிக்கை.

உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட GST வரி உயர்வினை உடனடியாக மத்திய அரசு திருமபி பெற வேண்டும்.

உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதித்து ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும். அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மீதான வரிவிதிப்புக்கு ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொண்டு வரி உயர்வுக்கு எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யாத திமுக அரசை கண்டிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment