ஸ்டாலினின் ஒருதலைக் காதல் எப்போதும் நிறைவேறாது.! வருவாய்த்துறை அமைச்சர் பேச்சு.!

  • மதுரையில் பசுமலை அமிர்தானந்தமயி மடத்தில் 24-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆன்மீக விழிப்புணர்வு சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்துகொண்டு, திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவி மீது காதல் கொண்டுள்ளார். முதல்வர் பதவி அவர் மீது காதல் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

மதுரை பசுமலை அமிர்தானந்தமயி மடத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் ஆன்மீக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாதா அமிர்தானந்தமயி பங்கேற்று, 24-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மடத்திற்கு வருகை தந்த அவர் இரண்டு நாட்களிலும் காலை 11 மணி முதல் நடக்கும் சத்சங்கம் பஜனை தியானம் தரிசன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் மதுரையில் மாதா அமிர்தானந்தமயி சத்சங்க நிகழ்ச்சியில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவி மீது காதல் கொண்டுள்ளார். முதல்வர் பதவி அவர் மீது காதல் கொள்ளவில்லை என்றும், ஸ்டாலினின் ஒருதலைக் காதல் எப்போதும் நிறைவேறாது எனவும் கூறினார். மேலும் கதை,  திரைக்கதையை மாற்றி வேண்டுமானால் முயற்சிக்கலாம் என தெரிவித்தார்.