தமிழகத்தில் தஞ்சமடைந்த 12 இலங்கை அகதிகள்.! மீட்டெடுத்த தமிழக கடலோர காவல்படையினர்.!

6 சிறார்கள் உட்பட 12 பேர் தனுஷ்கோடி அடுத்த 4வது மணல் திட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கையில் கடும் பொருளாளதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் கடல் வழியாக வெவ்வேறு நாடுகளுக்கு தப்பி சென்று வருகின்றனர்.

அதில், அவர்கள் அதிகம் வரும் நாடு என்றால் அது, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா. அவ்வப்போது இலங்கை மக்கள் அகதிகளாக இந்தியா வந்தாலும் , அண்மைக்காலமாக அது அதிகரித்து வருகிறது.

இதுவரை, ஏற்கனவே, மண்டபம் அகதிகள் முகாமில், 150 பேர் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். தற்போது மேலும், 6 சிறார்கள் உட்பட 12 பேர் தனுஷ்கோடி அடுத்த 4வது மணல் திட்டிற்கு வந்துள்ளனர். விஷயம் அறிந்த கடலோர காவல்படையினர் அவர்களை மீட்டு கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கடலோர காவல்துறையினர், அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment