பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு நியாயமற்றது – தமிழக அரசு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வாதம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது என்பது நியாயமற்றது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவத்திற்கான கொள்கைகைக்குள் இதை வகைப்படுத்த முடியாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பொருளாதார அளவுகோலின் கீழ் இடஒதுக்கீடு கொண்டு வருவது அரசியல் சாசன பிரிவு 14-ஐ மீறும் செயலாகும் என்றும் இந்திரா சாவ்னி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உள்ளதும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment