#IPL2022: தொடர்ச்சியாக 5-ம் முறை.. 9 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி மீண்டும் வெற்றி!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதிய நிலையில், இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 36-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பெங்களுர் அணி பேட்டிங் செய்தது. 16.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த பெங்களூர் அணி, 68 ரன்கள் எடுத்தது. 69 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – கேன் வில்லியம்சன் களமிறங்கினார்கள்.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிவந்த அபிஷேக் ஷர்மா 8 பவுண்டரிகள் 1 சிக்ஸ் என மொத்தமாக 47 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, அதிரடியாக சிக்ஸர் அடித்து போட்டியை முடித்தார். இதன்மூலம் ஹைதராபாத் அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 5-வது வெற்றியை தொடர்ந்த ஹைதராபாத் அணி, புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியது.