நேபாளத்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா! 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

நேபாளத்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா! 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

South Africa vs Nepal

டி20I: நடப்பாண்டு டி20 உலக கோப்பை தொடரின் 31 வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் நேபாளம் அணியும் அர்னோஸ் வேல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 43 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்களை எடுத்தனர். அதைப்போல, நேபாளம் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் குஷால் புர்டெல் 4 விக்கெட்களையும், தீபேந்திர சிங் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

தென் ஆப்பிரிக்கா அணி 115 ரன்கள் எடுத்து இருந்த நிலையில்,  116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்கியது. அதன்படி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக 1 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

அதிகபட்சமாக நேபாளம் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ஆசிப் ஷேக் 42 ரன்களும், அனில் சா 27 ரன்களும் எடுத்தனர். அதைப்போல, தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில், தப்ரைஸ் ஷம்சி 4 விக்கெட்களை வீழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube