SAVIND: 2-ஆம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா 11 ரன்கள் முன்னிலை..!

முதல் நாள் ஆட்ட முடிவில்:

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட்  போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டி நேற்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி முதல் நாள் முடிவில் 59 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் எடுத்தனர்.

களத்தில் முகமது சிராஜ் ரன் எடுக்காமலும், கேஎல் ராகுல் 70 * ரன்கள் இருந்தார். இதைத்தொடர்ந்து, இன்று 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் 67.4 ஓவருக்கு 245 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101, விராட் கோலி 38, ஷ்ரேயாஸ் ஐயர் 31, ஷர்துல் தாக்கூர் 24 ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணியில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டையும், நந்த்ரே பெர்கர் 3 , மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

அதிரடி சதம்! சச்சின், விராட் சாதனையை முறியடித்த விராட் கோலி!

2-ஆம் நாள் ஆட்டம்:

இதைத்தொடர்ந்து, இன்றைய நாளில் பாதியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக  ஐடன் மார்க்ராம், டீன் எல்கர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ஐடன் மார்க்ராம் 5 ரன் எடுத்து முகமது சிராஜ் ஓவரில் கே.எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த டோனி டி ஜோர்ஜி  சற்று நிதானமாக விளையாடி 28 ரன்கள் எடுத்து பும்ரா ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய  கீகன் பீட்டர்சன் வந்த வேகத்தில் 2 ரன்கள் எடுத்து பும்ரா வீசிய பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.  பின்னர் தொடங்க வீரர் டீன் எல்கர் , டேவிட் பெடிங்காம் இருவரும் கூட்டணி அமைத்து சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர். சிறப்பாக விளையாடி வந்த தொடங்க வீரர் டீன் எல்கர் சதம் விளாசினார். இருப்பினும் மறுபுறம் விளையாடிய டேவிட் பெடிங்காம் 80 பந்தில் அரைசதம் கடந்து 56 ரன்னில் முகமது சிராஜ் ஓவரில் போல்ட் ஆனார்.

சதம் விளாசிய கே.எல்.ராகுல்.. 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா..!

பின்னர் களம் கண்ட கைல் வெரைன் சொற்ப ரன்கள் எடுத்து வெளியேற 2-ம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டை இழந்து 256 ரன்கள் எடுத்து 11 ரன்கள் முன்னிலையில் உள்ளது. களத்தில் டீன் எல்கர் 140* , மார்கோ ஜான்சன் 3* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டையும் , பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் பறித்துள்ளனர்.

author avatar
murugan