விரைவில் நாம் நிலவில் இருப்போம்-கமல்ஹாசன் ட்வீட்

சந்திராயன் -2 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது  தகவல் தொடர்பை இழந்தது. இதனை எதிர் பார்த்து இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.எந்த நாடும் நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை இறக்கியதில்லை. எனவே இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

அந்தவ வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், விரைவில் நாம் நிலவில் இருப்போம். இஸ்ரோ விஞ்ஞானிகளை நாடு நம்புகிறது, பாராட்டுகிறது .சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்டது தோல்விக்கு சமமானதல்ல.ஆராய்ச்சியில் கற்றலுக்கான காலம் இது என்று  கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.