இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றம் இந்த ஒற்றுமை யாத்திரை.! சோனியா காந்தி கருத்து.!

“இந்திய அரசியல் வரலாற்றில் இந்த பாரத ஒற்றுமை யாத்திரை ஒரு மாற்றமான தருணமாக இருக்கும்” என்று சோனியா காந்தி கூறினார்.

காங்கிரஸ் எம்.பியும் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 3,570 கிமீ தூரம் நடந்தே சென்று கொண்டிருக்கிறார். நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து இந்த நடைபயணம் தொடங்கியது.

பாரத ஒற்றுமை யாத்திரை இன்று இரண்டாம் நாளாக தொடர்கிறது. அடுத்து திருவனந்தபுரம் செல்கிறார் ராகுல் காந்தி. வழிநெடுக காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ ஒற்றுமை யாத்திரை தொடர்ந்து வருகிறார் ராகுல் காந்தி. இந்த விழாவின் தொடக்க விழாவில் உடல்நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி கலந்துகொள்ளவில்லை.

இந்த ஒற்றுமை யாத்திரை தொடர்பாக, பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவரும், ராகுல் காந்தியின் அம்மாவுமான சோனியா காந்தி, ‘இந்த பாரத ஒற்றுமை யாத்திரை காங்கிரஸிற்கு ஓர் புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.

“இந்திய அரசியல் வரலாற்றில் இந்த யாத்திரை ஒரு மாற்றமான தருணமாக இருக்கும்” என்று சோனியா காந்தி கூறினார். மேலும், ‘ இங்கு வந்து கலந்து கொள்ள முடியாதவர்கள்,  இருக்க முடியாதவர்கள், சிந்தனையிலும் உள்ளத்திலும் யாத்திரையில் பங்கேற்பார்கள்.  ஒற்றுமையாக முன்னேறுவதற்கு உறுதிமொழி எடுப்போம்,” என்றும் அவர் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment