மீண்டும் சேது சமுத்திர திட்டம்…! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சேது சமுத்திர திட்டத்தை விரைவில் செயல்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

2004-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் செத்து சமுத்திர திட்டத்தை தொடங்கி வைத்தார். ராமர் பாலம் இடிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட சர்ச்சைகளால் சேது சமுத்திர திட்டம் தொடர்ந்து தாமதம் ஆக்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்திட மத்திய அரசு முன் வர வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்கும். இந்த திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில்,  சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக செயல்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment