அனைவருக்கும் தனித்தனி ஹெல்த் ஐடி கார்ட் – பிரதமர் அறிவிப்பு!

தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுதந்திர தின விழா உரையின்போது துவக்கிவைத்தார்.
நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி அவர்கள் கொடி ஏற்றி உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், நமது நாடு தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனை நோக்கி செல்ல உள்ளது. இந்தியாவின் சுகாதாரத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தப் போகும் இந்த தேசிய டிஜிட்டல் நான் துவக்கி வைக்கிறேன், மருத்துவ துறையில் இது புரட்சிகர திட்டம் ஆகும் எனக் கூறியுள்ளார்.
தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியர்களும் சுகாதார அடையாள அட்டைகளை பெறுவார்கள். ஒவ்வொரு முறை, மருத்துவரையோ, அல்லது மருந்தகங்களையோ நீங்கள் அணுகும்போது, பதிவு செய்யப்படும் அனைத்து விவரங்களும், இந்த சுகாதார அட்டையில் பதிவேற்றமாகிவிடும்.
நாட்டின் எந்த மருத்துவமனை அல்லது மெடிக்கலை நீங்கள் அணுகினாலும், அனைத்து விவரமும் இதில் பதிவாகும். டாக்டர் அப்பாயின்மென்ட், மருந்து குறிப்பு உள்ளிட்ட எல்லா விவரமும் இதில் இருக்கும். அவசர காலத்தில் எளிதாக அனைத்து மருத்துவ விவரங்களையும், மருத்துவர்கள் அறிந்து கொள்ள இந்த அட்டை உதவும். இந்த ஹெல்த் மிஷன் திட்டத்தின் கீழ் உருவாகும் ஹெல்த் ஐடி கார்டு அனைவருக்கும் தனித்தனியாக வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
author avatar
Rebekal