செயல்பாபு என முதல்வரால் பாராட்டப்பட்ட சேகர்பாபு, ஒரு ஸ்நேக் பாபு – எச்.ராஜா

இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை, ஸ்நேக் பாபு என விமர்சித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்து சமய அறநிலையத்துறையை,  அறநிலையத்துறை என மாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இந்த துறை இந்து மதத்தை அழிப்பதற்காக உள்ள துறை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை முதல்வர் செயல்பாபு என்று பாராட்டுகிறார். போஸ்டரில் இந்து சமய அறநிலையத்துறையை ,அறநிலையத்துறை என மாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர் செயல்பாபு இல்லை, ஸ்நேக் பாபு என விமர்சித்துள்ளார்.

அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும், ரூ.1,000 வழங்கும் திட்டத்தை  தொடங்கி வைத்த போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் சேகர்பாபுவை, செயல்பாபு என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.