சீதக்காதி……..25வது படம்……..அதிரடியில் மிரட்ட வரும் விஜய் சேதுபதி……..2 லுக் போஸ்டர் வெளியீடு…..!!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வேடனாக தோன்றும் சீதக்காதி படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Related image
நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் தான் சீதக்காதி படத்தை இயக்குகிறார். கலைக்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை கதைக்களமாக வைத்து உருவாகி வருகிற இப்படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய முதியவர் தோற்றத்தில் நடிக்கிறார்.சமீபத்தில் இந்த விஜய்சேதுபதியின் வயதான தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Image result for seethakathi
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்து வருகிறார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் அதிக பேசப்பட்டு வரும் நிலையில்  படக்குழு இதற்காக ‘பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ உள்ளிட்ட படங்களுக்கு மேக்கப் மேனாகப் பணியாற்றிய கேவின் ஹானோவை ஒப்பந்தம் செய்துள்ளது.
Image result for seethakathi
விஜய்சேதுபதியின் 25-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அடுத்தகட்டமாக படத்தின் சென்சார் குறித்த தகவலையும், விஜய்சேதுபதி வேடன் போல் தோன்றும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். சென்சாரில் இந்தப் படம் ‘யூ’ சான்றிதழைப் பெற்றிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இந்த தகவலை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.


DINASUVADU
 

author avatar
kavitha

Leave a Comment