இடைத்தேர்தல் :சீமான் பிரச்சாரம் மேற்கொள்ளும் விவரம் வெளியீடு

சீமான் நாங்குநேரி ,விக்கிரவாண்டி,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
வருகின்ற 21-ஆம் தேதி நாங்குநேரி ,விக்கிரவாண்டி,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ளது.தற்போது தேர்தல் நெருங்க உள்ள நிலையில் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாங்குநேரி ,விக்கிரவாண்டி,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.