தமிழகத்தில் ஏப்.15- 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

TN Schools: தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை.

தமிழ்நாட்டில் 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 18 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப். 2 முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் ஏப். 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏப்ரல் 10ம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வை ஏப்ரல் 22ம் தேதிக்கும், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவிருந்த சமூக அறிவியல் தேர்வை ஏப்ரல் 23ம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்