முருங்கைக்காய் ஊறுகாய் செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

முருங்கைக்காய் -முருங்கைக்காயை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

  • முருங்கைக்காய் =1 kg
  • நல்லெண்ணெய் =400ml
  • பூண்டு =100கிராம்
  • புளி =200 கிராம்
  • மிளகாய்த்தூள் =100கிராம்
  • வெந்தய  பொடி =15 கிராம்
  • கடுகு பொடி =15 கிராம்
  • பெருங்காயம் =20கிராம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள எண்ணெய்யை  ஊற்றி அதிலே அரை இன்ச் சைஸ்க்கு  முருங்கைக்காயை வெட்டி சேர்த்து 50 சதவீதம் வேக வைக்கவும். பிறகு அதிலே பூண்டு சேர்த்து வேக வைக்கவும்.

பூண்டு வெந்தவுடன் புளி கரைசல் ,வெந்தயத்தூள், கடுகு தூள் ,பெருங்காயம், மிளகாய்த்தூள் ,உப்பு சேர்த்து கிளறி விட்டு ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் முருங்கைக்காய் ஊறுகாய் தயாராகிவிடும் . இதில் நாம் எந்த ஒரு பதப்படுத்தும் ரசாயனம் சேர்க்கவில்லை என்பதால் இதை வெளியில் 15 நாட்கள் வரை வைத்துக் கொள்ளலாம்.

கோடைகாலம் வந்துவிட்டால் மாங்காய்க்கு எப்படி சீசன் இருக்கிறதோ அதுபோல் முருங்கை காயும் இந்த காலகட்டத்தில் அதிகமாக கிடைக்கும் .கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீடுகளிலுமே கிடைக்கும். அதை சாம்பார், புளி குழம்பு என மாற்றி மாற்றி செய்வதை விட இதுபோல் ஊறுகாய் செய்து வைத்துக் கொண்டால் அவ்வப்போது சாப்பிடலாம்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.