#SAvIND:3 வது ஒருநாள் போட்டி;டாஸ் வென்ற இந்திய அணி – பந்து வீச்சில் தெறிக்க விடுமா?..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

அந்த வகையில்,கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது.அதன்பின்னர்,களமிறங்கிய,இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததால்,1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலையில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து,இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கடந்த  21 ஆம் தேதி பார்ல் நகரில் நடைபெற்றது.இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்தது.

இதையடுத்து,288 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 48.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து,7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று, தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில்,இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டிக்கு முன்னதாக தற்போது டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்த போட்டியிலாவது இந்தியா வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்தியா XI: எஸ் தவான், கே எல் ராகுல் (கேப்டன்), வி கோஹ்லி, எஸ் ஐயர், ஆர் பந்த் (விக்கெட் கீப்பர்), எஸ் யாதவ், ஜே யாதவ், பி கிருஷ்ணா, டி சாஹர், ஜே பும்ரா, ஒய் சாஹல்.

தென்னாப்பிரிக்கா XI: கியூ டி காக் (விக்கெட் கீப்பர்), ஜே மாலன், ஏ மார்க்ராம், ஆர் வான் டெர் டுசென், டி பவுமா (கேப்டன்), டி மில்லர், ஏ பெஹ்லுக்வாயோ, கே மகராஜ், டி பிரிட்டோரியஸ், எஸ் மாகலா, எல் என்கிடி.