நிர்மலா சீதாராமனின் நலம் விசாரிப்பால் நெகிழ்ச்சியடைந்த சசிதரூர்

14

காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் திருவந்திபுரம் கோவிலில் துலாபாரம் கொடுத்த போது, காயமடைந்தார். இந்நிலையில், இவர் தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இதனையடுத்து, சசிதரூர், தேர்தல் பணிகளுக்கிடையிலும், தன்னை வந்து சந்தித்த நிர்மலாவின் செயல் நெகிழ்ச்சியடைய செய்துள்ளதாக தன ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.