சர்கார் காட்சி நீக்கம்…!மக்களை பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு மட்டுமே சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் …!சன் பிக்சர்ஸ் அதிரடி அறிவிப்பு

சர்கார் காட்சி  நீக்கம் தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி இடம்பெறும் இது அதிமுககாரர்களை மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஆதலால் அவர்கள் சர்கார் ஓடும் திரையரங்கில் போராட்டங்கள் நடத்தினார்கள்.

இதன் பின்  சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை மறுதணிக்கையில் தணிக்கைக்குழு நீக்கியது.சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமர்சித்த காட்சிகளை நீக்கியது.

இந்நிலையில் நீக்கம் தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் ‘சர்கார்’ திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல திரையரங்குகள் முன் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடமைகளுக்கு சேதம் விளைவித்தனர். அதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்றுத்  திரையரங்குகளையும், திரைப்படம் காண வரும் பொது மக்களை பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு மட்டுமே சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.