சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு திமுக முழு ஆதரவு …!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு திமுக முழு ஆதரவு …!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மத்தியில் நடக்கும் மக்கள் விரோத பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக இணைந்துள்ளோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எம்.பி. தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு பகுதியாக ஸ்டாலினையும் சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு.இதன் பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு .சந்திப்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த  சந்திப்புக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், சிபிஐ, ஆர்பிஐ உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக செயல்படாத நிலை உள்ளது.அதேபோல்  சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு திமுக முழு ஆதரவை தெரிவித்துள்ளது ன்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கூறுகையில்,  சிபிஐ, ஆர்பிஐ ஆகியவற்றின் பெருமையும் புகழும் குலைக்கப்படுகிறது. ஆளுநர்களை தங்கள் விருப்பத்துக்கு மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. பணமதிப்பு நீக்கத்தால் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது.காங்கிரசுடன் வேறுபாடு இருந்தாலும் ராகுல் காந்தியை சந்தித்தேன்.ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் உட்பட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.தனிநபர்களைப் பற்றி பேச இது நேரமல்ல, நாட்டின் நலன், ஜனநாயகமே இப்போது முக்கியம். கூட்டணியை வழிநடத்த பல தலைவர்கள் உள்ளனர், மோடியைவிட மு.க.ஸ்டாலின் கூட சிறந்தவர்.நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவர்களை ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைக்க முயற்சி நடைபெற்று வருகிறது என்றும்  ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *