அஜித் பவாரை சரத்பவார் மன்னித்து விட்டார் – தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்

கடந்த சனிக்கிழமை பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்   முதலமைச்சராக பதவி ஏற்றார்.இவரை போல துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்றார்.ஆனால் தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா-காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக ஆட்சியமைத்தது.இதற்கு  எதிராக 3 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தனது ஆட்சிக்கு பெரும்பாண்மை இல்லாத நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.இவருக்கு முன்னதாக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து அஜித் பவார் விலகினார்.எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும் பட்னாவிஸ்  தெரிவித்தார்.
இதனால் தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி சார்பாக உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதற்கு இடையில் அஜித் பவார் ஏற்கனவே தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பதாக தெரிவித்து வந்தார்.அஜித் பவார் குறித்து தேசியவாத  காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறுகையில், அஜித் பவாரை சரத்பவார் மன்னித்து விட்டார். அஜித் பவார் கட்சியின் பதவியில் தொடர்வார் என்றும் தெரிவித்துள்ளார்.