#BREAKING: சேலம் ஆத்தூர் திமுக வேட்பாளர் திடீர் மாற்றம் -திமுக அறிவிப்பு..!

சேலம் ஆத்தூர்  தொகுதியில் திருமதி ஜீவா ஸ்டாலின் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக புதிய வேட்பாளராக சின்னதுரையை திமுக அறிவித்துள்ளது.

திமுக சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 61 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டணி கட்சிகளில் 14 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டிடவுள்ளனர். இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 187 தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டிடவுள்ளனர்.

கடந்த 12-ம் தேதி திமுக தவைவர் முக ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிடம் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். இந்நிலையில், சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூர்(தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த திருமதி ஜீவா ஸ்டாலின் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக புதிய வேட்பாளராக சின்னதுரையை திமுக அறிவித்துள்ளது.

author avatar
murugan