சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான சாய் பல்லவி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

don 69

இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் , அடுத்தாக சிவகார்த்திகேயன் தனது 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தை, ராஜ் கமல் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்தியேனுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இன்று அவரின் பிறந்த நாள் என்பதால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.