சாத்தன் குளம் :அனைவரும் கைது செய்யப்பட்டனர்- ஐஜி தகவல்

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் அனைவரும் கைது செய்யப்பட்டதாக ஐஜி சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக கைது  சிபிசிஐடி போலீசார் கைது செய்தது.கங்கைகொண்டான் செல்லும் வழியில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் 5 ஆவது குற்றவாளியாகவும் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை முடிந்த நிலையில் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை, தடயங்களை அழித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தை, மகன் கொலை வழக்கில் இதுவரை 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இதுவரை  ரகு கணேஷ், பாலகிருஷ்ணன்,முத்துராஜ்,முருகன் என உள்ளிட்ட  4 காவல் ஆய்வளார்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது குறித்து தகவல் தெரிவித்துள்ள சிபிசிஐடி ஐஜி சங்கர் இவ்வழக்கு தொடர்பான அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும்; எங்கள் மீது நம்பிக்கை வைத்த  அரசு மற்றும் நீதிமன்றத்திற்கு நன்றி, விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதில் ரகுகணேஷ் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த அவர் இவ்வழக்கு தொடர்பாக இன்று சிலர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha