ஒரு நாளைக்கு ரூ.2.40 கோடி ஊழல்.. 5.5 லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது – ஜெயக்குமார்

நாள்தோறும் ஆவின் பாலில் ஊழல் நடைபெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.

சென்னையில் செய்தியர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆவினில் தினந்தோறும் பாலில் 2.40 கோடி மதிப்புள்ள ஊழல் நடைபெற்று வருவதாக புகார் கூறியுள்ளார்.  ஒரு நாளைக்கு 37 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாடு முழுவதும் விற்பனையாகிறது. இதில் ஒரு நாளுக்கு 5.50 லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது என பால்வள துறை அமைச்சர் நாசரை , ஜெயக்குமார் கிண்டலடித்தார்.

ஆவினில் தினந்தோறும் கொள்ளையடிக்கும் 5.50 லிட்டர் பாலின் விலை, ரூ.2.40 கோடி என தெரிவித்தார். ஒரு அரை லிட்டர் பாலில் சுமார் 70 மிலி அளவுக்கு குறைகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.800 கோடி ஊழல் செய்துள்ளார்.  விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வது திமுகவிற்கு கைவந்த கலை. ஆவினில் ஊழல் செய்தது தொடர்பாக பால்வள துறை அமைச்சர் நாசரை விசாரணை செய்ய வேண்டும்.

நீதிபதி தலைமையில் விசாரணை செய்ய வேண்டும், துறை ரீதியான விசாரணை எந்த விதத்திலும் நியாயம் கிடைக்காது இன்றும் குறிப்பிட்டார். இதனிடையே, ஆவின் பால் பாக்கெட்டுகளில் எடை குறைந்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆவின் நிறுவனம் ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment