‘தளபதி 67 ‘ படத்தில் ரோலக்ஸ்.? லைக் செய்து மாட்டிக்கொண்ட சூர்யா.!

நடிகர் விஜய் அடுத்ததாக வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர். இதற்கிடையில், அவ்வபோது படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

இதையும் படியுங்களேன்- படத்தை பார்த்து மிரண்டு போயிட்டேன்…‘துணிவு’ படத்தை வெளியிடும் ‘வாரிசு’ தயாரிப்பாளர்.!

அந்த வகையில், தற்போது தளபதி 67 படமும் LCU படம் எனவும், படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் ஏற்கனவே கசிந்தது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை த்ரிஷா தளபதி 67 படம் குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது.

அந்த வீடியோவை பார்த்த நடிகர் சூர்யா டிவிட்டரில் லைக் செய்து ஒரு குறியீடு ஒன்றை கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “ஒரு வேல இருக்குமோ” எனவும், பதிவிட்டுள்ளார். உடனே இந்த தகவல் வைரலாகவும் உடனே அந்த ட்வீட்டை அன் லைக் செய்துவிட்டார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment