இவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க திறனற்ற திமுக அரசு மறுக்கிறது – அண்ணாமலை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களை சந்திக்காமல் இருப்பது இந்த திறனற்ற திமுக அரசுடைய மெத்தனப் போக்கின் வெளிப்பாடு என அண்ணாமலை ட்வீட். 

ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க திறனற்ற திமுக அரசு மறுக்கிறது.

போராட்டம் தொடங்கி மூன்று நாட்கள் கடந்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களை சந்திக்காமல் இருப்பது இந்த திறனற்ற திமுக அரசுடைய மெத்தனப் போக்கின் வெளிப்பாடு.

மாநிலத் துணைத் தலைவர்கள் மற்றும் மாநில செயலாளர்  ஆகியோர் இன்று இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர்.’ என பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment