ரோஹித்னா சும்மாவா ..? 200-வது போட்டியில் களமிறங்கும் ரோஹித் சர்மா ..!!

IPL 2024 : இந்திய அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் ஆன ரோஹித் சர்மா இன்று தனது 200-வது ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து களமிறங்க உள்ளார்.

மும்பை அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறார். இந்த போட்டியானது ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு 200-வது ஐபிஎல் போட்டியாகும். இந்த போட்டியில் இவர் ஏதாவது சாதனை படைப்பார் என்று ரோஹித் ஷர்மாவின் ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.மேலும், இவர் மும்பை அணிக்கு கேப்டனாக அறிமுகமான 2013 ஐபிஎல் தொடரிலேயே வலுபெற்ற தோனி தலைமையிலான சென்னை அணியை இறுதி போட்டியில் வீழ்த்தி கோப்பையை வென்றார்.

அதனை தொடர்ந்து 2015, 2017, 2019, 2020 என்று 4 தொடர்களில் கோப்பையை வென்றுள்ளார். இதில் ஸ்வாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இவர் வென்ற ஐபிஎல் கோப்பை ஐந்து போட்டிகளில் 4 முறை தோனி தலைமை தாங்கிய அணியையே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 2013 ஆண்டு இறுதி போட்டியில் சென்னை அணியை எதிர்த்து விளையாடி முதல் முறையாக கோப்பையை தட்டி சென்றார்.  அதன் பிறகு 2015-ம் ஆண்டும் சென்னை அணியை எதிர்த்து விளையாடி கோப்பையை வென்றார்.

அதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணியை எதிர்த்து விளையாடி கோப்பையை வென்றார். அதன் பிறகு மீண்டும் 2019-ம் ஆண்டு சென்னை அணியை எதிர்த்து இறுதி போட்டியில் விளையாடி த்ரில் வெற்றியுடன் 4-வது ஐபிஎல் கோப்பையை வென்றார்.  2022 -ம் ஆண்டு மட்டும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடி 5-வது ஐபிஎல் கோப்பையை வென்று, ஐபிஎல் தொடரில் மும்பை அணி போல ஒரு வலுவாய்ந்த அணியாக கொண்டு சேர்த்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் 200-வது போட்டியை விளையாட போகும் முதல் வீரராக ரோஹித் சர்மா இன்று களமிறங்க உள்ளார். மேலும், மும்பை அணிக்காக ஒரு கேப்டனாக 5 ஐபிஎல் கோப்பைகளுடன், அதிக ஆட்டநாயகன் விருதையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.