ரஜினி கூறியதில் தவறில்லை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ரஜினி கூறியதில் தவறில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் நாளை அதிசயங்கள் நடக்கும் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,  நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ரஜினி கூறியதில் தவறில்லை.
ரஜினி ஆன்மிகவாதி என்பதால் நாளை எதுவும் நடக்கலாம் என ஆன்மிக கோணத்தில் கூறியுள்ளார். பாட்ஷா படத்தின்போதே ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.காலம் தாழ்த்திவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.