பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் காலில் விழுந்த ரஜினி ரசிகர்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 10ஆம்  தேதி வெளியாகி உள்ள திரைப்படம் பேட்ட. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. நல்ல வசூலையும் ஈட்டி வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார் என பலர் நடித்திருந்தனர். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தியது. முக்கியமாக ரஜினி ரசிகர்களுக்கு வெகு நாட்களுக்கு பிறகு ரஜினியின் முழு மாஸ் ஸ்டைல் படமாக இப்படம் அமைந்துள்ளது.

இந்நிலையில் சென்னை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் திரைப்படத்தை பார்த்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அவர் படம் முடிந்து ரசிகர்களின் சந்திப்பின் போது ஓர் 55 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் இயக்குனரின் காலில் விழுந்து, எங்களது பழைய ரஜினியை திருப்பி கொடுத்துள்ளீர்கள் என கூறி பாராட்டியுள்ளார் .இந்த நிகழ்வை தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment