உத்தர பிரதேசத்தில் தனித்து களமிறங்குகிறது காங்கிரஸ்

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் பிரதான கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தநிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மக்களவை தேர்தலை தனித்து சந்திக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும், 2009ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வென்றதைவிட இருமடங்கு இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளத்துடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் 21 இடங்களில் வெற்றிபெற்றது. அதேசமயம் தனித்தனியாக போட்டியிட்ட சமாஜ்வாதி 23 இடங்களையும், பகுஜன் சமாஜ்வாதி 20 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment