ராஜஸ்தான் இடைத்தேர்தல்! பாஜக அமைச்சர் தோல்வி.. காங்கிரஸ் அபார வெற்றி!

ராஜஸ்தானில் கரன்பூர் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக அமைச்சரை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்தர்பால் சிங்கை, காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் குன்னார் 12,750 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வேட்பாளர் இறந்ததால் கரன்பூர் சட்டமன்ற தொகுதியில் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றபோது வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதனால், கரன்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், பாஜக அமைச்சர் சுரேந்திர சிங்கை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் குன்னார் போட்டியிட்டார்.  கடந்த 5-ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

இந்த நிலையில், கரன்பூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக அமைச்சரை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.  சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில், தற்போது கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

எனவே, ராஜஸ்தானில் அமைச்சரான பிறகும், சுரேந்திர பால் சிங், கரன்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் வெற்றி பெறவில்லை. பாஜக முதல்வர் பஜன் லால் சர்மா சில நாட்களுக்கு முன்பு, சுரேந்திர பால் சிங்கை கேபினட் அமைச்சராக நியமித்து அவருக்கு 4 இலாக்காக்களை ஒதுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்