அடுத்த 3 மணிநேரத்தில் இந்தந்த இடங்களில் மழை – வானிலை மையம்

அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செங்கல்பட்டு பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர புயல் மாண்டஸ் வலுவிழந்து, சாதாரண புயலாக மாறியுள்ளது. இந்த மாண்டஸ் புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காரைக்காலில் இருந்து 180 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 260 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்றிரவு முதல் நாளை காலை வரை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும்.

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில்,  அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், ஆலந்தூர், அயனாவரம், மயிலாப்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செங்கல்பட்டு பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதுபோன்று, அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக அமைந்தக்கரை, எழும்பூர், கிண்டி, மாம்பலம், தாம்பரம்,வேளச்சேரி பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment