எதிர்க்கட்சி தலைவர்கள் மீதுதான் ரெய்டு நடத்தபடுகின்றது.! மஹாராஷ்டிரா எம்.பி கண்டனம்.!

நாட்டில், 90 முதல் 95 சதவீத அமலாக்கத்துறை சோதனைகள் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தான் நடத்தப்படுகின்றன.- தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே கண்டனம். 

மகாராஷ்டிராவில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹசன் முஷ்ரிப்க்கு சொந்தமான இடஙக்ளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை மகாராஷ்டிராவில் நிகழ்ந்த சர்க்கரை ஆலை ஊழல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே கூறுகையில், ‘ நாட்டில், 90 முதல் 95 சதவீத அமலாக்கத்துறை சோதனைகள் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தான் நடத்தப்படுகின்றன. ‘ என்று குற்றம் சாட்டினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment