ராகுல் காந்தியின் ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவு.! மும்பைக்கு விரையும் தலைவர்கள்…

Bharat Jodo Nyay Yatra : காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்னதாக கான்னியகுமாரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மாநிலங்களில் பெரும் வரவேற்ப்பு கிடைத்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தனது நடைப்பயணத்தை கிழக்கில் இருந்து மேற்காக தொடங்கினார்.

Read More – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

கடந்த ஜனவரி 14ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் “பாரத ஒற்றுமை நியாய யாத்திரை” எனும் பெயரில் தனது நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி. மணிப்பூர், நாகலாந்து, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் கடந்து சுமார் 6,700 கிமீ நடந்துள்ளார். தற்போது மகாராஷ்டிராவில்  தனது ஒற்றுமை யாத்திரையை தொடர்ந்து வருகிறார்.

READ MORE – இபிஎஸ் vs ஓபிஎஸ் : இரட்டை இலை சின்னம் யாருக்கு.? இன்று தீர்ப்பு.!

இந்த பாரத ஒற்றுமை நியாய யாத்திரை நாளை நிறைவடைய உள்ளது. நாளை மகாராஷ்டிராவில் மும்பை நகரில் சிவாஜி பூங்காவில் பிரமாண்ட விழாவை இதற்காக காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில், இந்தியா கூட்டணி அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ள்ளனர்.

READ MORE – சுட்டெரிக்கும் வெயில்… தமிழகத்தில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்.!

நாளைய கூட்டத்தில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (சரத் அணி) தலைவர் சரத்பவார் உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அண்மையில் தலையில் அடிபட்டு சிகிச்சையில் இருப்பதால் அவர் வருவதாக தெரியவில்லை. ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வருகை பற்றிய தகவல்களும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment